• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கை

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்றைய தினம் யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

அதன்போது கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தினர் தெரிவிக்கையில்,

பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது இம்முறை 16 வது தடவையாக மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியில் 78,000 வரையான பார்வையாளர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வர்த்தகர்களால் 400 க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம், தொழில்நுட்பம் , , விருந்தோம்பல், கல்வி, உணவு நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும், வடக்கிலுள்ள சமூகங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்வேறு வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிந்து கொள்வதற்கும் தெற்கு மற்றும் சர்வதேச தொழில் முயற்சியாளர்கள் வடக்கிலுள்ள சக தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்து வியாபார பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் தொடர்புகளை வளர்க்கவும் எமது தொழில் முயற்சியாளர்கள் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவற்றின் வினைத்திறனான செயல்பாடுகளை அறிந்து பயனடையும் களமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அமைந்துள்ளது.

இம்முறை எமது உற்பத்திகளையும் முன்னிலைப்படுத்தும் நோக்குடன் மேலதிக புதிய காட்சிக்கூடங்களும் இட ஒதுக்கீடுகளும் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்றைய காட்சிக்கூடங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த விலையில் இக்காட்சிக் கூடங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் வழமை போலவே வழங்கப்பட்டுள்ளமை கணிசமான குறிப்பிடத்தக்கதாகும்.

 உள்ளுர் நுண்ணிய சிறிய தொழில் தமது வியாபார வலையமைப்பை முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக காட்சிக்கூடங்கள் அமைப்பதங்கான இலவச இட ஒதுக்கீடுகள் மேம்படுத்திக்கொள்வதற்கான களமாகவும் இக் கண்காட்சி அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணமாக 200 ரூபாய் அறவிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொனிப்பொருளான பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் என்பதன் அர்த்தத்தையும் அதனால் நாம் அடைந்துள்ள மற்றும் அடையப்போகும் சாதகமான விளைவுகளையும் கருத்தில் கொண்டு சகல தரப்பினரும் செயல்பட வேண்டிய ஒரு கடமைப்பாடு உள்ளது என தெரிவித்தனர்.
 

Leave a Reply