ஜாக்கி படத்தின் 'தென்னாட்டு சிரிக்கி பாடல் வெளியானது
சினிமா
'மட்டி' பட இயக்குநர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம்தான் 'ஜாக்கி'. மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
பிரகபல்லின் முதல் படமான 'மட்டி' திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதா நாயகியாக நடித்துள்ளார்.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 4வது பாடலான 'தென்னாட்டு சிரிக்கி' தற்போது வெளியாகி உள்ளது.























