கனடா பிரதமர் கட்டார் விஜயம்
கனடா
கனடா பிரதமர் மார்க் கார்னி கட்டாருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் மூலம், கனடா–கட்டார் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், கனடாவில் வணிக முதலீடுகளை ஈர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக கட்டாரில் தங்கும் கார்னி, அந்நாட்டு வணிக மற்றும் அரசுத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
பதவியில் உள்ள கனடா பிரதமர் ஒருவர் கட்டாருக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
தூதரக மற்றும் பாதுகாப்புத் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வளர்ந்து வரும் கூட்டாளியாக கட்டார் மாறி வருவதால், அந்த உறவை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என கனடிய உயர் அதிகாரி ஓரவர் தெரிவித்துள்ளார்.
அண்மையஆண்டுகளில் கத்தார், சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது. இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவது, ரஷ்ய படைகளால் கடத்தப்பட்ட உக்ரைனிய குழந்தைகளை மீண்டும் ஒன்றிணைப்பதில் உதவுவது உள்ளிட்ட முயற்சிகள் அதற்கு உதாரணமாகும்.
மேலும், ருவாண்டா–காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் வெனிசுவேலா–வாஷிங்டன் இடையிலான பேச்சுக்களிலும் கட்டார் பங்கேற்க முயற்சி செய்துள்ளது.






















