ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதால் கல் வீசி தாக்கினார்கள்.. காப்பாற்றியது இவர்தான் - ரஜினிகாந்த்
சினிமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக முன்பு கூறி வந்தார், ஆனால் அதன் பிறகு தனது உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை மாற்றிக்கொண்டார்.
ரஜினி 1995ல் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அரசியலில் அப்போது பரபரப்பான விஷயமாக மாறியது.
இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜூக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ரஜினி பேசும்போது 1995 சம்பவம் பற்றி பேசி இருக்கிறார்.
"சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் ஆவேசமாக பேசியதால் சிலர் கற்களை வீசி தாக்கினர். அப்போது நான் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல உதவியவர் பாக்யராஜ் தான்" என ரஜினி கூறி இருக்கிறார்.






















