• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டித்வா – நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர்  ஆரம்பமாகியுள்ளது.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply