• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவல்

இலங்கை

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் (09).இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.

அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது.

இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிர்சேதங்களோ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை எனவும் தீரபரவலுக்கான காரணம் இதுவரை கண்டரிய பட வில்லையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a Reply