அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் - பெண் துப்பாக்கிச் சூடு
ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளார்.
ஆனாலும்,அந்த நபர் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டு ஜன்னலை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா? உள்பட சம்பவம் குறித்த பிற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.





















