நல்வாழ்விற்காக சிரமங்களை எதிர்கொள்ள தயார் - கனடிய பிரதமர் மார்க் கார்னி
கனடா
கனடியர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற எமது அரசாங்கம் அவர்களின் நல்வாழ்விற்காக சிரமங்களை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது என ஒட்டாவா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றான கனடாவை தங்கள் வாழ்விடமாகவும் சிறந்த வாழ்க்கை தமக்கு கிட்ட வேண்டும் எண்ண்ம் கொண்டவர்களாகவும் உள்ள கனடியர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற எமது அரசாங்கம் அவர்களின் நல்வாழ்விற்காக சிரமங்களை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.
எனவே நாம் பல அண்மைக்காலத்தில் பல சிரமங்களை எதிர்கொண்டாலும் எமது அமைச்சர்கள் மற்றும் அறிவு சார்ந்தவர்களின் முறையான செயற்பாடுகளினால் எமது தேசத்தின் பொருளாதாரம் மிகவும் ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாமும் எமது மக்களும் அவதானிக்கின்றார்கள்.
எனவே பல நல்ல திட்டங்களை அமுல்செய்யவும் எமது மக்களிற்கு பல வசதிகளை செய்து கொடுக்கவும். கனடிய இராணுவத்தை ஒரு பலன் கொண்டதாக உயர்த்தவும் நெடுந்தூரப் பாதைகளை அமைக்கவும் பெருந்தொகைப் நிதியை நாம் ஒதுக்கியுள்ளோம்.
இவ்வாறு ஒட்டாவா நகரில் 10ம் திகதி புதன்கிழமையன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கனடிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் தமிழ் பேசும் அமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் ஆகியோர் உட்பட பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.





















