சிட்னியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி
சினிமா
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காவல்துறையினரின் காவலில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து பொண்டாய் கடற்கரைப் பகுதிக்கு மக்கள் வர வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து எச்சரித்துள்ளது.























