திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
இலங்கை
திருகோணமலை சீனக்குடா 5ம் கட்டை பகுதியில் நேற்று இரவு (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 61 வயதுடைய பிரசன்ன ஹேமகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்கு கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கப்பல்துறை பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கொலை பாதாள உலக சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று காலை திருகோணமலை தலைமை நீதிபதி எம்.என். சம்சுதீன் முன்னிலையில் சடலத்தின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது, அதே நேரத்தில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























