• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை

சினிமா

டிக்டாக் நேரலையில் பேசிக் கொண்டிருந்த அழகு கலைப் பிரபலம் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல அழகுகலைஞர் வலேரியா மர்குவெஸ் என்ற 23 வயது பெண்பிரபலம். அவர் நேற்று முன்தினம் டிக் டாக் நேரலையில் தனது ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு டெலிவரி செய்ய வந்த பணியாளர் போன்ற உடையில் வந்த ஒருவர், திடீரென அழகி வலேரியாவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அழகி உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிசூடு சம்பவமும் டிக் டாக் நேரலையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மெக்சிகோ நாட்டின் காவல் துறை விசாரணை நடத்தி வருவதக தகவல் வெளியாகி உள்ளது.
 

Leave a Reply