• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறுமலர்ச்சிக்கான பாதை – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு

இலங்கை

மறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

“கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – மறுமலர்ச்சிக்கான பாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போது, காங்கேசன்துறை கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனினால் காப்பற் வீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த காப்பற் வீதியின் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் , தொடர்ந்து J/233 மாம்பிராய் முதலாவது வலதுபக்க வீதி, J/234 கிராமசேவகர் பிரிவில் சந்தைவீதி , கீரிமலை வீதியில் இரண்டாவது ஒழுங்கை , என்பன கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் புனரமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது

அத்துடன் பிரதேச சபை நிதி பங்களிப்பில் மாயானவீதி புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

மேலும் மறுமலர்ச்சிக்கான பாதை நிகழ்ச்சிதிட்டத்தின் J/233 மாங்கொல்லை வீதி உள்ளிட்ட ஏனைய பிரிவுக்குட்பட்ட புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply