இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கை
டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் நிவாரண மானியத்தை அங்கீகரித்துள்ளது.
அதேநேரம், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்கு தலா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ADB அங்கீகரித்துள்ளது.
அந்தந்த அரசாங்கங்களின் ஆதரவு கோரிக்கைகளைத் தொடர்ந்து, ADB இன் தலைவர் மசாடோ காண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த மானியங்கள் அவசரகால மற்றும் மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கும்.
மேலும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பெரிய பேரழிவுகளுக்குப் பின்னர் உடனடியாக உயிர்காக்கும் நோக்கங்களுக்காக வளரும் உறுப்பு நாடுகளுக்கு விரைவான மானியங்களை வழங்கும் ஆசிய – பசிபிக் பேரிடர் நடவடிக்கை நிதியத்திலிருந்து






















