• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கை

‘டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

அதன்படி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு இன்று (03) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து அறிவிப்பதற்காக ‘0712666660’ எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த தரவு கட்டமைப்புக்குத் தேவையான தகவல்களை, பாதிக்கப்பட்ட கைத்தொழிலதிபர்கள் இயலுமான விரைவில் வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தலை இம்மாதம் 16 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், www.industry.gov.lk அல்லது https://aid.floodsupport.org/business-impact ஆகிய இணையத்தளங்கள் ஊடாக தகவல்களை உள்ளிட முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தேவையான ஒத்துழைப்புக்களை உரிய பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply