• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

இலங்கை

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வென்னப்புவ, லுனுவிலவில் அண்மையில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார். 

குரூப் கேப்டன் சியம்பலாபிட்டியவின் உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானையில் உள்ள வீட்டிற்கு இன்று ஜனாதிபதி சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். 

விமானியின் மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினருக்கும் அவர் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார். 

அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply