• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்

இலங்கை

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் “வெசாக் பக்திப் பாடல் இசைத்தல் நிகழ்வு “, இரண்டாவது நாளாக நேற்று ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது

வெசாக் பக்திப் பாடல் இசை நிகழ்வின் இரண்டாவது நாளில், இலங்கை விமானப்படை இசைக்குழு, பிரபல பாடகர் இலியாஸ் பேக் மற்றும் இலங்கை விமானப்படை பக்திப் பாடல் குழுவுடன் இணைந்து நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கூடு கண்காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கங்காராம விகாராதிபதி கலாநிதி வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இந்த பக்தி பாடல் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறுவதோடு வெசாக் கொண்டாட்டங்களைக் காண கொழும்புக்கு வரும் மக்களுக்காக 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சிற்றுண்டி தானசாலை நடைபெறும்.

இதே வேளை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தன்ஸல், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று உயர் இராணுவ அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுதவிர, கங்காராம “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் மற்றும் “பௌத்தலோக” வெசாக் வலயம் ஆகியவற்றுடன் இணைந்ததாக, ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் அண்டிய பகுதிகளில் பல வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள கட்டிடங்கள் மற்றும் வீதிகளை மின் விளக்குகளால் அலங்கரித்தல், வெசாக் கூடு கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஜனாதிபதி பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.
 

Leave a Reply