• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் காற்றின் தரம்

இலங்கை

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளன.

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இன்று 58 மற்றும் 120 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு காணப்படுவதாக சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளன.

இது ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என கணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
காற்றின் தரம் குறைவதால், உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்று காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு அடுத்த 24 மணி நேரத்திற்குள் நல்லதொரு நிலைக்கு மேம்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply