உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது- இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!
இலங்கை
இலங்கையின் பல பகுதிகளில் டித்வா சூறாவளியின் கடுமையான தாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு மனிதாபிமான நடவடிக்கையாக ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) சிறப்புக் குழுக்களை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பியது.
டித்வா சூறாவளி ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா.
இந்த நிலையில், தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் NDRF குழுக்கள் இன்று (05) கொழும்பிலிருந்து புறப்பட்டன.
இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பிலும் வழிகாட்டுதலிலும் பணியாற்றி, NDRF பல மாவட்டங்களில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டது.






















