• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை குறித்த அப்டேட் தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்

சினிமா

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஜித்தின் புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படிருந்தது. திரைப்படம் முதலில் வரும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த பொங்கலுக்கு அஜித் நடிக்கும் விடாமுயற்சி வெளியாக இருப்பதால் குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் ஆதிக் செய்தியாளர் சந்திப்பில் " அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லாரும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையும். முதல்ல விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வருது. அத பாத்து ரசிகர்கள் கொண்டாடுவாங்க அதுக்கு அப்பறம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் " என கூறியுள்ளார்.

Leave a Reply