கனடாவின் வின்ட்ஸோர் தீ விபத்தில் ஒருவர் பலி
கனடா
கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
தீ விபத்தில் சிக்கிய பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வின்ட்ஸோர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சமப்வம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.