• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கை

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை கூறியுள்ளார்

இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சந்தையில் நிலவும் நாட்டு அரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் ஸ்வர்ண நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
 

Leave a Reply