கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் படுகொலை
இலங்கை
கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும்,
உயிரிழந்த சிறுவன் வீட்டில் இருந்த போது கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன்,
கொலையுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டுள்ளதுடன் 02 வாள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.