சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
இலங்கை
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன் விஜயம் மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சீன தூதரகத்தில் இருந்து அவருக்கு சீனாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்