விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி தற்கொலை
இலங்கை
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பருடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
உயிருடன் மீட்கப்பட்ட மாணவி தற்போது அதிர்ச்சிக்குள்ளான தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.