• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர்  ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார்.

பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக  நந்திக் கொடி வழங்கப்பட்டது.

Leave a Reply