• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணில் – அநுர அரசியல் டீலை வெளிக்கொண்டு வருவோம் – சஜித்

இலங்கை

ரணில் அநுர அரசியல் டீலை எதிர்வரும் 21 ஆம் திகதியன்று மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் எனவும், தமது ஆட்சியில் இன மத பேதமின்றி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றிப்பேரணி அநுராதபுரம் பகுதியில் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் இதன்போது அநுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியில் பங்கேற்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாகவுக்கு சிறப்பான வரவேற்பை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச,

தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றியானது நாட்டு மக்களின் வெற்றியாகும். 21 ஆம் திகதி மக்கள் தொலைபேசி சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக நாட்டில் பொதுமக்கள் ஆட்சி யுகம் ஆரம்பமாகும்.

எமது ஆட்சியில் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம்.

ஊழல்வாதிகளும் ஊழல்வாதிகளை பாதுகாத்தவர்களும் சட்டத்தின்முன்னிறுத்தப்படுவார்கள். இன்று அநுரவும் ரணிலும் அரசியல் டீல் இல் உள்ளனர். அவர்களின் டீல் என்னவென்றார் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடிப்போம் என்பதே ஆகும்.

நாட்டு மக்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நாட்டின் 220 லட்சம் மக்களும் பொதுக்கள் யுகத்தினை ஏற்படுத்த தயாராகவிட்டனர். யாருக்கு வாக்களித்தால் பொதுமக்கள் யுகம் ஏற்படும் என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர்.

21 ஆம் திகதிவரை டீலை தொடருமாறு ரணில் விக்ரமசிங்கவிடமும் அநுரகுமாரவிடமும் நான் கூறுகின்றேன். ஏனெனில் ரணில் அநுர டீல் அரசியலை மக்கள் 21 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவருவார்கள்.

நான் மக்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றேன். டீல் அரசியலில் உள்ளவர்களுக்கு வாக்களித்து ஏமாறாமல் மக்கள் வெற்றியடைவதற்கே வாக்களிக்க வேண்டும். இன மத பேதமின்றி இந்த நாட்டுமக்களை நான் பாதுகாப்பேன் அதற்கான பலத்தினை மக்கள் எனக்கு வழங்க வேண்டும்.
 

Leave a Reply