• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சிகாலம் நாட்டின் இருண்ட யுகமாகும்

இலங்கை

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி இந்த நாட்டில் இருண்ட யுகமாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 1977 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் உற்பத்தி பொருளாதாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டது.

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் அவரது ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னின்று செயற்பட்டவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். அதனையடுத்து நாட்டில் ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சி அமைந்தது.

ஜே .ஆர் ஜயவர்தனைவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக ரணசிங்க பிரேமதாசவை கொண்டுவந்தனர். அதனையடுத்து 88 மற்றும் 89 ஆண்டு காலப்பகுதியில் கலவரத்தின் போது தீவைத்து மக்களை கொன்றனர். மேலும் அதனையடுத்து ரணசிங்கவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

Leave a Reply