• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது

இலங்கை

நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸாரின்  விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000  ரூபாய்  வரையில்  சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply