• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13 ஆம் திருத்தத்தைப் பயன்படுத்தியே தேர்தலில் வெற்றிபெற சஜித் எண்ணுகின்றார்

இலங்கை

”13 ஆம் திருத்தத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முயற்சிக்கின்றார்” என அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  தேர்தலை இலக்கு வைத்து சஜித் பிரேமதாச வடக்கிற்கு சென்று பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

சிறு பிள்ளைகளை அதாவது 10 லட்சம் ரூபாவுக்கு பாடாசாலை மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவதன் ஊடாக தமது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றார்.

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக 13 ஆவது திருத்தத்தை பற்றிப் பேசுகின்றார். அதனை பயன்படுத்தியே தேர்தலில் வாக்குப்பெற்று கரைசேர எண்ணுகின்றார்.

ஆனால் நாம் 13 ஆம் திருத்தத்தை காரணம் காட்டி தேர்தல் பிரசார பணிகளை நாம் மேற்கொள்ளவில்லை. கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகின்றோம் இந்த நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முகாமைத்துவ திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

Leave a Reply