• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொத்து வரியில் திருத்தம்

இலங்கை

2025 ஆம் ஆண்டளவில் நாடளாவிய  ரீதியில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ எதிர்வரும் ஆண்டின் சித்திரை மாதப்பகுதிக்குள் ஒட்டு மொத்தமாக நாட்டில் சொத்து வரியை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.

எனினும் அவ்வாறு செய்ய முடியாத காரணத்தினால்,அறவிடப்படும் வாடகை வருமான வரியை திருத்தியமைக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Leave a Reply