• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள்

இலங்கை

மன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செலயகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, மன்னார் மடு மற்றும் சிவனொலிபாத மலை போன்ற புனித தளங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிப்பட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவது நியாமற்றதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அத்தோடு, மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்காமல் போன அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திலேயே ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் மன்னாரைச் சுற்றி முன்னெடுக்கப்படவிருக்கும்  அபிவிருத்தி தொடர்பில் உங்களை தெரியப்படுத்தியுள்ளதால் எவரிடத்திலும் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது எனவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக மன்னார் மாவட்டத்தை கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply