• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலாவியின் மறைந்த துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் விபத்து

இலங்கை

கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின்  மறைந்த துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவின்  (Saulos Chilima)  இறுதி ஊர்வலத்தின் மீது  வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று மோதியத்தில் 4  பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் லிலாங்வேக்கு தெற்கே 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிலிமாவின் சொந்த கிராமமான என்சிபே வழியாக அவரது உடல்  நேற்றைய தினம்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோதே இவ்விபத்து  இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply