• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயல்கின்றது

இலங்கை

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அதனாலேயே தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயல்கிறது. நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால் தற்போதைய ஜனாதிபதி உட்பட அவரது ஆதரவாளர்களும் வீடு செல்ல வேண்டி ஏற்படும்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்புவதற்கான எந்தவித வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை.

நாட்டில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதுடன் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் எமது ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்.

நாட்டிற்கு பொருத்தமான வகையிலேயே ஒப்பந்தங்கள் அமைய வேண்டும்” இவ்வாறு வசந்த சமரசிங்க  தெரிவித்துள்ளார்.

Leave a Reply