• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனியொருவராக உருவாக்கிய ரூ 5480 கோடி நிறுவனம்... 5 ஆண்டுகளில் அதை விற்றுவிட்டு அவர் எடுத்த முடிவு

பல எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் கல்வியை முடித்து வெளிநாடுகளில் பணியாற்றிய பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கும் பொருட்டு இந்தியா திரும்பியுள்ளனர்.

அப்படியானவர்களில் ஒருவர் ஐதராபாத் பகுதியை சேர்ந்த வாணி கோலா. அமெரிக்காவில் நீண்ட 22 ஆண்டுகள் பணியாற்றியவர், தற்போது Kalaari Capital என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், பின்னர் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.

1996ல் RightWorks என்ற நிறுவனத்தை நிறுவியவர், பல வெற்றிகளை குவித்து, 5 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நிறுவனத்தை 687 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்றார்.

இன்றைய மதிப்பில் அந்த தொகையானது ரூ 5480 கோடி. இதன் பின்னர் இந்தியா திரும்பிய வாணி கோலா Kalaari Capital என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

Vinod Dham மற்றும் Kuar Shiralagi ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு New Enterprise Associates என்ற நிறுவனம் முதலீடு செய்தது.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிறுவனம் விலகிக்கொள்ள 2012ல் Kalaari Capital என்ற பெயரில் புதிதாக களம் கண்டார். இவரது நிறுவனமானது இதுவரை 850 மில்லியன் டொலர் தொகையை முதலீடாக ஈர்த்துள்ளது. அத்துடன் 110 வளரும் நிறுவனங்களுக்கு நிதியுதவியும் அளித்துள்ளது.
 

Leave a Reply