• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதையும் HACK செய்யலாம்.. EVM முறையை நியாயப்படுத்திய ராஜீவ் சந்திரசேகருக்கு எலான் மஸ்க் பதிலடி

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் EVM வாக்கு இயந்திரங்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.

எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை. வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த பதிவுக்கு உடனே ரியாக்ட் செய்துள்ள எலான் மஸ்க், Anything can be hacked எதையும் ஹேக் செய்ய முடியும் என்று ரிப்லை செய்துள்ளார். இவ்வாறாக EVM விஷயம் பூதாகரமாக மாறிக்கொண்டிருக்கும் வேலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்ததக்கது. 
 

Leave a Reply