• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொல்லை தந்த முதலையை கொன்று தின்ற மக்கள்

அவுஸ்திரேலியாவின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ராட்சத முதலையொன்று கிராம மக்களை துன்புறுத்தி வந்ததாகவும், இவ்வாறு தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த முதலையை கொன்று அதன் இறைச்சியை மக்கள் உட்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 12 அடி நீளமான ராட்சத முதலையொன்று இவ்வாறு பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

இந்த முதலையினால் பெரியவர் முதல் சிறுவர்கள் வரையில் அச்சத்தில் உறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த முதலை செல்லப்பிராணிகளை கொன்று உணவாக உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதலை தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த காரணத்தினால் இவ்வாறு முதலையை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும் இந்த முதலையின் வாலை சூப் வைத்து கிராம மக்கள் குடித்ததாகவும் இறைச்சியை சமைத்து உண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் உப்பு நீரிலும் நன்னீரிலும் வாழும் முதலைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விலங்கு வேட்டை அcவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியிலேயே முதலையைக் கொன்று அதனை கிராம மக்கள் உணவாக உட்கொண்டுள்ளனர் அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் சுமார் ஒரு லட்சம் முதலைகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உப்பு நீரில் வாழ்ந்த இந்த முதலை இனம் சுமார் 20 அடி வரையில் வளரக்கூடியவை எனவும் அவை எதையும் உட்கொள்ளக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ராட்சத முதலைகளுடன் மனிதர்களினால் போராடுவது சிரமம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் குயின்ஸ்லாந்து பிராந்தியத்தில் முதலை தாக்கியதில் 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டிலும் குயின்ஸ்லாந்தில் மீனவர் ஒருவரின் சடலம் முதலையின் வயிற்றிலிருந்து மீட்க பட்டிருந்தது. 

Leave a Reply