• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

இலங்கை

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கல்வியங்காடு பகுதியிலுள்ள மர விற்பனை நிலையமொன்றில் அதிக இயந்திரத் திறன் (CC) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

4 மோட்டார் சைக்கிள்களுக்கு எவ்வித பதிவுகளும் இல்லை.  

ஏனைய 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் போலியான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, ஏழு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றிய பொலிஸார், அவற்றைத் தமது உடைமையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சந்தேகநபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் என்றும், பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர் என்றும், சில பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சந்தேகநபரின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்த தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை
 

Leave a Reply