• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுற்றுலா வருவாயில் சரிவு - முதல் ஒன்பது மாதங்களில் 2,245 மில்லியன் டொலர் ஈட்டல்

இலங்கை

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) சுற்றுலாத்துறை வருவாய் 2,200 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இக்காலகட்டத்தில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருவாய் 2,245.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தீவுகள்ஆராயுங்கள்

இருப்பினும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சரிவாகும்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் இலங்கை 2,472.9 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாயைப் பெற்றிருந்தது.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருவாய் 185.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. 

இது முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பதிவான 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 1,693,679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். தீவுகள்ஆராயுங்கள்

இவர்களே இக்காலகட்டத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருவாய்க்குப் பங்களித்துள்ளனர்.
 

Leave a Reply