• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு – லிட்ரோ கேஸ் தெரிவிப்பு

இலங்கை

நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LP) சிலிண்டர்களின் விநியோகம் இன்று மாலை (19) முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் தொன் எல்.பி. எரிவாயுவை ஏற்றி வந்த ‘பிரான்சுவா’ (FRANCOIS) என்ற கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

கப்பலின் வந்தடைந்த எரிவாயுவை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, நாட்டிற்கு எரிவாயு தொடர்ந்து கிடைத்து வருவதால், சந்தையில் தடையற்ற மற்றும் இயல்பான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 16 முதல் 18 ஆம் திகதி வரை 350,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக அந்நிறுவனம் நேற்று (18) தெரிவித்திருந்தது.
 

Leave a Reply