கள்ளத்தொடர்பு சந்தேகத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை தாக்கிய மனைவி கைது
பங்களாதேஷில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை மனைவி கூர்மையான பிளேடால் தாக்கிய சம்பவம் பங்களாதேஷில் பரீத்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷின் பரீத்பூர் மாவட்டத்திலுள்ள பங்கா பகுதியில் ஜூன் 29, 2026 அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கணவரின் கள்ளத்தொடர்பு
இந்தச் சம்பவத்தில் ஹனிப் ஷேக் என அடையாளம் காணப்பட்ட நபர் காயமடைந்துள்ளார்.
அவருக்கும் அவரது மனைவி சுமையா அக்தர் சுமி இடையே, கணவரின் கள்ளத்தொடர்பு தொடர்பான சந்தேகத்தால் நீண்ட காலமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு இருவருக்கிடையே மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்ட நிலையில், பின்னர் கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு அவசர சேவைக்கு தகவல் வழங்கினர். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகநபரான மனைவியை கைது செய்தனர்.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.























