• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம்

பிறப்பு 09 MAR 1945 / இறப்பு 29 APR 2025

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம் அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருட்பிரகாசம் லில்லி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், நீக்கிலாப்பிள்ளை யோசவ் ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், யோய், சுலக்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்லீலிநாயகி, பாலசிங்கம், கீர்த்தி சிங்கம், ஜெயசிங்கம், காலஞ்சென்ற குலசிங்கம், தனசிங்கம், சூரிய குமாரி(குஞ்சுபபா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ஜெயசிங்கம், சாந்தி, காலஞ்சென்ற டெய்சி, தேவி, ராஜேஸ், வேஜி, சாள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பண்டத்தரிப்பிலுள்ள அவரது இல்லத்தில் 05-05-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 9.00 மணிமுதல் பி.ப 3.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு புனித அந்தோனியர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருமதி அருள் ஜெயசிங்கம் - சகோதரி

    Mobile : +14162724973

Leave a Reply