• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றில் காதலியிடம் திருமண கோரிக்கை வைத்த எம்பி - இணையத்தில் வைரல்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்டன் லேன் காதலியிடம் திருமண வேண்டுகோள் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்டன் லேன், நாடாளுமன்றத்திற்குள்ளேயே தனது காதலியிடம் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து திருமணக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, உணர்ச்சிப் பெருக்கில் அவரது கைகள் நடுங்கிய நிலையில், தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், குறித்த கஆணொளி வைரலாகி வருகின்றது.
 

Leave a Reply