• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாகக் கருதிச் செயற்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

இலங்கை

எட்டு தசாப்தங்களாக சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க யுனிசெப் (UNICEF) நிறுவனம் ஆற்றிய பணியைப் பாராட்டுகிறேன். சர்வதேச சிறுவர் தினத்தை ஒரு நாளில் மட்டுமன்றி வருடத்தின் 365 நாட்களும் சிறுவர் தினமாக கருதிச் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாக காணப்படுகின்றது. எதிர்காலத் தலைமுறை ஆண்டு முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற வைபவத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

1200 சிறுவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் ஐந்து அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துகளுடன் 1000 வீதம் உடன்படுகிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நியாயமான வெளிப்படையான அரச நிர்வாகம், பசுமை தாய்நாடு, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கல்வித் துறை, போதைப்பொருள், மது மற்றும் புகைப்பழக்கம் அற்ற நாடு, வலுவான பொருளாதாரம் ஆகியவை நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய மிக முக்கியமான செயற்பாடுகள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 

Leave a Reply