• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் பாடசாலைப் பையினுள் சட்டவிரோத மதுபான போத்தல்கள் - ஒருவர் கைது

இலங்கை

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைப் பையினுள் சூட்சுமமாக மறைத்து எடுத்துவரப்பட்ட 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய ஒருவர் அனலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து பயணிகள் படகு மூலம் அனலைதீவுக்குக் குறித்த மதுபானத்தை எடுத்துவர முற்பட்டபோது, காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அனலைதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் எனவும், பூவரசன்குளம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரையும் சான்றுப் பொருளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனலைதீவு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply