• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு

இலங்கை

பண்டாரவளை மற்றும் ஹீல்-ஓயா ஆகிய இடங்களுக்கு இடையே இன்று அதிகாலை (04)  ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலைநாட்டு ரயில் பாதையில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

162/54 மைல்கல் அருகே ரயில் தண்டவாளத்தின் மீது பெருமளவிலான மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தண்டவாளத்தில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றுவதற்கு சுமார் ஆறு மணிநேரம் தேவைப்படும் என்று நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ‘பொடி மெனிகே’ (Podi Menike) ரயில், இன்று பண்டாரவளை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

ரயில் பாதை சீரமைக்கப்படும் வரை, பதுளையிலிருந்து நானுஓயா நோக்கி இன்று இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தடைகள் நீக்கப்பட்டதும் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என்று ரயில்வே அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
 

Leave a Reply