• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க மீண்டும் வருகிறார் ஜென்டில்மேன்

சினிமா

1993-ல் வெளியான ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'ஜென்டில்மேன்' படம், 4K டிஜிட்டல் மற்றும் டால்பி அட்மாஸ் வடிவில் டிசம்பர் 11-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் ‘ஜென்டில்மேன்’. இப்படம் வரும் டிசம்பர் 11-ந்தேதி 4K டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பில் உலகமெங்கும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பணக்காரர்களிடம் இருந்து பணத்தை திருடி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு 'ராபின் ஹூட்' போன்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். இப்படத்தில் மதுபாலா, சுபாஸ்ரீ, எம்.என்.நம்பியார், மனோரமா, ராஜன் பி.தேவ், கவுண்டமணி, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்த இப்படம், ஷங்கர் - அர்ஜுன் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமாகும். இதன் தொடர்ச்சியாக 1999-ல் வெளியான 'முதல்வன்' திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. 
 

Leave a Reply