• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காட்ஸில்லா மைனஸ் ஜீரோ வெளியீட்டு தேதி தள்ளிவைப்பு - ராமாயணா படத்தின் மோதலை தவிர்க்க படக்குழு திட்டம்

சினிமா

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள ராமாயணா திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், காட்ஸில்லா மைனஸ் ஜீரோ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயாணா திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

ராமாயணா திரைப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் மற்றும் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டேவிட் ஜெஃபென் திரையரங்கில் ராமாயணா திரைப்படம் நேற்று திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியாவில் மட்டும் ராமாயணா திரைப்படத்தின் முன்பதிவுகள் சுமார் 13 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஜப்பானில் உருவாகியுள்ள ‘காட்ஸில்லா மைனஸ் ஜீரோ’ திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திரையரங்கு காட்சிகள் மற்றும் லாப நோக்கை கருத்தில் கொண்டு, இந்தியாவில் மட்டும் ‘காட்ஸில்லா மைனஸ் ஜீரோ’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை சிறிது காலத்திற்கு தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply