தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று மலையகத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு வரவேற்பு
இலங்கை
இந்தியா - தமிழ்நாடு, கோயம்புத்தூரில் கடந்த 7ஆம் திகதி முதல் நடைபெற்ற Open Championship தடகளப் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் இலங்கை வீரர்கள் வென்றுள்ளனர்.
இலங்கைக்குத் திரும்பிய விளையாட்டு வீரர்களான மனுவேல் சத்தியசீலன் மற்றும் துரைசாமி விஜிந்த் ஆகிய இருவரும் நேற்று (23.10.2026) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பில் சமூக சேவையாளரும், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) நிறைவேற்றுப் பணிப்பாளருமான அன்டனி ஜேசுதாஸன் கூறுகையில், வீரர்கள் இருவரும் தங்களது திறமையாலும், விடாமுயற்சியாலும் மலையகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், ஏனைய இளைஞர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
இவ்விரு வீரர்களும் இதற்கு முன்னரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ள போதிலும், அவர்களுக்குக் கிடைக்கும் அரசாங்கத்தின் ஆதரவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட இவ்வாறான விளையாட்டு வீரர்களை அரசாங்கமும் உரிய தரப்பினரும் அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க முன்வர வேண்டும்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






















