பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகும் அநுர - அதிர்ச்சியில் அரச ஊழியர்கள்
இலங்கை
நாட்டுக்கு பாராமாக உள்ள அரச நிறுவனங்களை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்து்ளளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற அரசாங்க அளவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 34 அரச நிறுவனங்களை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது குறித்து ஆராய்ந்து செயற்படுத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
விசேட கொடுப்பனவு
அத்தகைய நிறுவனங்களை மூடும் போது ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் சில சேவைகளை வழங்குவதற்கு தனியார் துறை முன்வரவில்லை. இந்த நிலையில் அரச நிறுவனங்களை உருவாக்க வேண்டியிருந்த போதிலும், தற்போதைய நிலையில் நாட்டிற்குள் வலுவான தனியார் சந்தையொன்று நிறுவப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில், இன்றைய காலத்திற்கு பொருத்தமற்ற பழைய நிறுவனங்களை மேலும் அரசின் செலவில் பராமரித்துச் செல்வதற்குப் பதிலாக, தனியார் துறையின் பங்களிப்பைப் பெறக்கூடிய துறைகளை கண்டறிவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
திறைசேரிக்கு கிடைக்கும் வருமானத்தை சரியாக அடிமட்ட மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்துவதே அரச சேவையின் முதன்மையான பங்களிப்பாக இருக்க வேண்டும்.
அதற்குத் தேவைப்படுவது மேலதிக ஊழியர்கள் அல்ல, மாறாகத் தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான நிர்வாகமே.
அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் மூன்று கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டளவில் 330 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2028 ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை அரச சேவையில் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான விசேட கொடுப்பனவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் உள்நாட்டு வருமானம் அதிகரித்தமையுடன் திறைசேரியில் நிலவிய நிதி நெருக்கடி தணிந்துள்ளது.
இருந்த போதிலும், எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில் வெளிநாட்டு கையிருப்பு மீதான அழுத்தம் இன்னமும் பாரிய சவாலாகவே காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.





















