• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் நடக்கப்போகும் நடிகர் சூர்யாவின் சீன் பட நிகழ்ச்சி... 

சினிமா

நடிகர் சூர்யா, இந்த வருடம் முழுவதும் செம சந்தோஷமான விஷயங்கள் நடந்துள்ளது.

முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடிப்பில் வெளியான கருப்பு படம் மாபெரும் வெற்றி. பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் வசூலிலும் மாஸ் காட்டியது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, மமிதா பைஜு, ராதிகா நடிக்க விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி இருந்தது.

படம் கருப்பு அளவிற்கு இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடியது. படங்களில் வெற்றிக்கு இடையில் சூர்யா-ஜோதிகாவின் 20வது வருட திருமண நாள் வர கிறிஸ்துவ முறைப்படி வெளிநாட்டில் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொண்டார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

வெளிநாடு

இப்போது அடுத்து சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள சீன் படம் வெளியாக இருக்கிறது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடித்துள்ள சீன் படம் வரும் நவம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை வரும் அக்டோபர் 25ம் தேதி துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

சிலிக்கான் சென்ட்ரல் மாலில் இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாம்.
 

Leave a Reply